அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டார்.
ஆலோசனையில் பண்ருட்டி ராமசந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேபெற்றனர். அதிமுக விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஓபிஎஸ் முக்கிய ஆலோசனை நடத்தினர்.
ஆலோசனைக்கு பின் ஓபிஎஸ், பண்ருட்டி ராமசந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர்.
அப்போது பண்ருட்டி ராமசந்திரன் தெரிவித்துவது, “பொதுக்குழு கூட்டுவதற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் சேர்ந்துதான் கையெழுத்திட வேண்டும் என்று அதிமுக விதி உள்ளது.
பொதுக்குழு கூட்டியது சரி என்று சொல்லிவிட்டு, அதில் நிறைவேற்ற தீர்மானங்களை பற்றி நாங்கள் ஒன்றும் சொல்ல மாட்டோம் என்று உச்சநீதிமன்றம் சொன்னது, தங்களுடைய பொறுப்பை தட்டிக் கழித்து விட்டதாக கருத தோன்றுகிறது.
ஆனாலும் உச்சநீதிமன்ற தீர்ப்பு என்ற காரணத்தினால் எங்கள் தரப்பு நியாயங்களை என்ன என்பதை அவர்களிடம் விளக்க போதுமான அளவுக்கு எங்களுக்கு திறமை இல்லையோ என்று நாங்கள் கருதுகிறோம்.
உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.வேலுமணி கேவியட் மனுத்தாக்கல்! #SPVelumani #ADMK #DMK #TNGovt #MKStalin #Politics #Chennai #Tamilnadu #Seithipunal https://t.co/x19Of8fNJm
— Seithi Punal (@seithipunal) February 24, 2023
எனினும் எங்களிடம் நியாயம் இருக்கிறது. நாங்கள் ஒரே கேள்வி தான் கேட்கிறோம். அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உண்டா இல்லையா என்பதற்கு உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் அதற்குரிய தீர்ப்பை வழங்காமல், வெறும் பொதுக்குழு செல்லும் என்று சொல்கிறார்கள்.
இது சுற்றி வளைத்து தான் சொல்லப்படுகிறது. எனவே இதனை சுட்டிக்காட்டி கழக வழக்கறிஞர்கள் நல்ல தீர்ப்பை பெற உள்ளோம். மேல்முறையீடு என்பது இல்லை. நாங்கள் தேர்தல் ஆணையம் சிவில் கோர்ட்டில் சட்ட ரீதியாக போராட உள்ளோம்” என்று தெரிவித்தார்.