ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் புதிய ஒரு அனுபவமாக நமது போட்டோக்களில் தேவையில்லாத படங்களை நீக்கும் Magic Eraser வசதியை Google நிறுவனம் அதன் Pixel மற்றும் Google One பயனர்களுக்கு வழங்கவுள்ளது.
Google நிறுவனத்தின்
Machine Learning
மற்றும்
AI Photo Editing
வசதி மூலமாக நாம் எடுக்கும் புகைப்படங்களில் இருக்கும் தேவையில்லாத பொருட்களையும், மனிதர்களையும் படத்தில் இருந்து நீக்கமுடியும். இந்த வசதி இதற்கு முன்னதாக Pixel 7 மற்றும் Pixel 6 ஆகிய ஸ்மார்ட்போன்களில் மட்டும் இருந்துவந்தது.
இதேபோல
HDR video Effect
மற்றும் புதிய
Collage Style
ஆப்ஷன்களும் இப்போது iOS மற்றும் Android ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்படும். இந்த வசதிகளை இனி Google One சந்தா செலுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களும் பெறலாம். மேலும் இதற்கு முன்பு விற்பனை செய்துவந்த Pixel போன் பயனர்களுக்கு இந்த வசதி விரைவில் எந்த ஒரு சந்தா திட்டமும் இல்லாமல் இலவசமாக கிடைக்கும்.
இந்த Magic Eraser வசதியை நாம் பயன்படுத்தவேண்டும் என்றால் நம்மிடம்
Google Tensor Chip
இருக்கவேண்டும். ஆனால் அவை Google போன்களில் மட்டுமே இருப்பதால் மற்ற போன்களுக்கு Google நிறுவனத்தின் Server அதற்கு பதிலாக எடிட்டிங் வேலை செய்யும்.
இதேபோல Google One பயனர்களுக்கு
HDR Effect Video
வசதியை அறிமுகம் செய்யவுள்ளது. போட்டோக்களில் இருக்கும் HDR வசதியை போலவே நாம் வீடியோ பயன்படுத்தும்போதும் நமது வீடியோ தரம் தானாக அதிகரிக்கும்.
இந்த வசதிகள் அனைத்தும்
Google Pixel போன்கள்
மற்றும் Google One பயனர்களுக்கு அடுத்த Google Photos App அப்டேட் மூலம் கிடைக்கும். இதுபோன்ற வசதிகள் பிரீமியம் சந்தா கட்டணம் செலுத்தி பயன்படுத்தும் வகையில் இருக்கும் Adobe போன்றவற்றில் மட்டுமே இருந்துவந்தது. ஆனால் இனி Google Photos மூலமாகவே நாம் பலவித எடிட்டிங் வேலைகளை செய்யலாம்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்