Mayilsamy: மயில்சாமியின் கடைசி நிமிடங்கள்.. நடந்தது என்ன.?: மகன்கள் கூறிய தகவல்கள்..!

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளவர் மயில்சாமி. இவர் மக்கள் மனதை விட்டு அகலாத ஏராளமான காமெடி காட்சிகளில் தனது தனித்துவமான நடிப்பால் முத்திரை பதித்துள்ளார். இவரின் திடீர் மறைவு திரையுலக வட்டாரத்தினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இவரின் மகன்கள் அளித்துள்ள பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மறைந்த சின்ன கலைவாணர் விவேக் மற்றும் வடிவேலு உட்பட பல நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து பல காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் மயில்சாமி. நடிகராக மட்டுமில்லாமல் ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்வதிலும் சிறந்த ஒருவராக வாழ்ந்து மறைந்துள்ளார் மயில்சாமி. இவரின் அடுத்தவர்களுக்கு உதவி வேண்டும் என்ற எண்ணமும், துடிப்பும் பற்றி இன்று பலரும் பேசி வருவது கேட்பவரை கலங்க செய்கிறது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட மயில்சாமி கடந்த 18 ஆம் தேதி கேளம்பாக்கத்தில் உள்ள மேகாநாதீஸ்வரர் கோயிலில் இரவு முழுக்க இருந்துள்ளார். தீவிர சிவா பக்தரான மயில்சாமி சிவராத்ரியை முன்னிட்டு அதிகாலை வரை கோயிலில் இருந்துள்ளார். அதன்பின்னர் அதிகாலை வீடு திரும்பிய மயில்சாமி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

Pathu Thala: என்ன ரத்தங்களா ரெடியா..?: வெறித்தனமான சம்பவத்திற்கு தயாராகும் சிம்பு.!

அவரின் திடீர் மறைவு பலருக்கும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மயில்சாமியின் மரணம் தொடர்பாக அவரது மகன்கள் அன்பு மற்றும் யுவன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளனர். அப்போது, அப்பாவின் மறைவு தொடர்பாக யூடியூப் சேனல்கள் ஏதேதோ வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இதை பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது. அதனால் அப்பாவின் மரணத்தின் போது என்ன நடந்தது என்பதை கூறவே இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு.

Mirchi Shiva: ‘ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான்.. ஆனா’ – மிர்ச்சி சிவா அதிரடி..!

சிவராத்திரி அன்று அப்பாவுடன் நானும் கோயில் இருந்தோம். நேரம் ஆக அவரை வீட்டிற்கு போக சொன்னார் சிவமணி சார். வீட்டிற்கு வந்து சாப்பிட்டதும் அப்பா மூச்சு விட சிரமமாக இருப்பதாக கூறினார். உடனடியாக கார் மூலம் தனியார் மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்த போது, அப்பா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள். ஒருவருக்கு ஏதாவது ஒன்று என்றால் சம்பந்தப்பட்ட குடும்பத்தாரை அழைத்து உறுதி செய்யுங்கள். இனிமேலும் தவறான தகவல்களை பரப்பினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம் என எச்சரிக்கை செய்துள்ளனர்.

Jayam Ravi: பொன்னியின் செல்வனுக்கு முன்பாக வெளியாகும் ஜெயம் ரவி படம்: அதிரடி அறிவிப்பு.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.