Mayilsamy, Ajith: அஜித்தையும் உலுக்கிய மயில்சாமியின் மரணம்..

தனது ரசிகரின் மரணத்தை தொடர்ந்து நடிகர் மயில்சாமியின் மரணமும் நடிகர் அஜித்தை உலுக்கியுள்ளதாம்.

கடன் வாங்கி உதவிஏழை எளிய மக்களுக்கு உதவும் குணம் கொண்ட நடிகர் மயில்சாமி திரைத்துறையில் அனைவரிடமும் நல்ல நட்பை மேற்கொண்டிருந்தார். தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு தன்னிடம் இருக்கும் பணத்தை கொடுத்து உதவிய மயில்சாமி, தன்னிடம் பணம் இல்லாத பட்சத்தில் மற்ற நடிகர்களிடம் கடன் வாங்கிக் கொடுத்து உதவிகளை செய்து வந்தார். மயில்சாமியின் இந்த உதவும் குணத்தை சினிமா பிரபலங்கள் பலரும் புகழ்ந்துள்ளனர்.
​ Mayilsamy, Ajith: எம்ஜிஆர் ரசிகர்களுக்கு உங்களை பிடிக்கும் … அஜித்தை உருக வைத்த மயில்சாமி!​
57 வயதில் மரணம்மயில்சாமியின் நெருங்கிய நண்பரான விவேக் மயில்சாமி ஒரு நாள் ஏழையாக இருப்பார் ஒரு நாள் பணக்காரராக இருப்பார் என்றும் தன்னிடம் யார் உதவி என்று கேட்டாலும் கடன் வாங்கியாவது உதவி செய்வார் என்றும் கூறியிருந்தார். இதேபோல் எம்எஸ் பாஸ்கர், மனோ பாலா, வையாபுரி உள்ளிட்ட பலரும் மயில்சாமியின் உதவும் குணத்தை கூறி புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் 57 வயதே ஆன மயில்சாமியின் திடீர் மரணம் திரையுலகினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
​ Rajinikanth, Kantara 2: காந்தாரா 2வில் ரஜினிகாந்த்? ரிஷப் ஷெட்டியின் பதில் இதுதான்!​
சோகத்தில் அஜித்மயில்சாமியின் மரணம் பிரபலங்கள் பலரையும் உலுக்கியுள்ளது. அந்த வகையில் மயில்சாமியின் மரணத்தால் கலங்கிப் போயுள்ளாராம் நடிகர் அஜித். அஜித்தை எப்போதும் எம்ஜிஆருடன் ஒப்பிட்டு பேசும் மயில்சாமி அவர் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தார். மயில்சாமிக்கு அஜித்தை எந்த அளவுக்கு பிடிக்கும் என்பது அஜித்துக்கும் தெரியும் இந்நிலையில் மயில்சாமியின் திடீர் மரணம் நடிகர் அஜித்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
​ விரைவில் சினிமாவுக்கு முழுக்கு போடும் நயன்தாரா?​
அதிர்ச்சி மேல் அதிர்ச்சிஏற்கனவே துணிவு பட கொண்டாட்டத்தின் போது அஜித்தின் ரசிகர் ஒருவர் லாரியில் இருந்து விழுந்து உயிரிழந்தார். அந்த சோகத்தில் இருந்தே அஜித் இன்னும் மீளாத நிலையில் மயில்சாமியின் மரணம் அவருக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளதாக கூறி வருகின்றனர் அஜித்துக்கு நெருக்கமானவர்கள். நடிகர் அஜித்துடன் மயில்சாமி, வேதாளம் வீரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
​ Mayilsamy: மயில்சாமியின் சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா? தீயாய் பரவும் தகவல்!​
கருவறையில் மயில்சாமிகடந்த சனிக்கிழமை இரவு மகா சிவராத்திரியை முன்னிட்டு விடிய விடிய கண் விழித்த நடிகர் மயில்சாமி, ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 3. 30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். தீவிர சிவபக்தரான மயில்சாமியின் மரணத்தை அடுத்து அவர் கடைசியாக சென்று வந்த கேளம்பாக்கம் சிவன் கோவிலின் கருவறையில் அவருடைய போட்டோ வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
​ Mayilsamy: மயில்சாமியின் மரணத்திற்கு காரணம் இதுதானா? மருத்துவர்கள் கூறிய பகீர் தகவல்!​
Ajith-Kumar

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.