எட்டாவது மகளிர் T 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் அவுஸ்திரேலியாவுடன் மோதும் இரண்டாவது அணி எது என்பதை தீர்மானிக்கும் 2வது அரையிறுதி போட்டி இன்று நடக்கிறது.
இதில் போட்டி தொடரை நடத்தும் தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இன்று மாலை 6.30 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.
எட்டாவது மகளிர் வு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது.
10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா (8 புள்ளி) முதலிடமும், தென்ஆப்பிரிக்கா (4 புள்ளி) 2-வது இடமும், ‘பி’ பிரிவில் இங்கிலாந்து (8 புள்ளி) முதலிடமும், இந்தியா (6 புள்ளி) 2-வது இடமும் பிடித்து.
அரைஇறுதிக்கு முன்னேறின. ‘ஏ’ பிரிவில் நியூசிலாந்து (4 புள்ளி) 3-வது இடமும், இலங்கை (4 புள்ளி) 4-வது இடமும், வங்காளதேசம் (0) கடைசி இடமும், ‘பி’ பிரிவில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட்இண்டீஸ் (4 புள்ளி) 3-வது இடமும், பாகிஸ்தான் (2 புள்ளி) 4-வது இடமும், அயர்லாந்து (0) கடைசி இடமும் பெற்று அரைஇறுதி வாய்ப்பை இழந்து வெளியேறின.
நேற்று (23) நடந்த முதலாவது அரையிறுதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ஓட்டங்களை எடுத்தது.
இதையடுத்து 173 ஓட்ட இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் ,8 விக்கெட்டுகளை இழந்து 167 ஓட்டங்களை எடுத்தது.
இதன் மூலம் அவுஸ்திரேலிய அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு தொடர்ந்து 7வது முறையாக ஆஸ்திரேலிய அணி உலக கோப்பை இறுதிச் சுற்றுக்கு முன்னேறியமை குறிப்பிடத்தக்கது.