வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லண்டன்-ரஷ்யா தொடுத்துள்ள போரால், இடம்பெயர்ந்துள்ள கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனின் பள்ளிச் சிறுவர் – சிறுமியருக்கு புத்தகம் மற்றும் எழுதுபொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்குவதற்காக, பிரிட்டனைச் சேர்ந்த இந்திய வம்சாவளி சிறுவன் தன் பெற்றோருடன் போலந்து நாட்டுக்குச் சென்றான்.
![]() |
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியில் உள்ள போல்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளி சிறுவன் மிலன் பால் குமார், ௧௦.
இவன், கடந்த ஆண்டு உக்ரைன் பள்ளிகளுக்காக நிதி திரட்டினான். அப்போது, கார்களை கழுவி கிடைத்த தொகை மற்றும் தன் செலவுக்கு பெற்றோர் அளித்த பணம் ஆகியவற்றை சேமித்து வழங்கினான். இதற்காக, இச்சிறுவனுக்கு கடந்த ஆண்டு ‘இளவரசி டயானா’ விருது வழங்கப்பட்டது.
இதற்கிடையே, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது.
இந்தப் போரால், உக்ரைன் மக்கள் பல்வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்நிலையில், உக்ரைன் பள்ளிக் குழந்தைகளை சந்தித்து, அவர்களுக்கு புத்தகம், எழுதுபொருள் உள்ளிட்டவற்றை வழங்குவதற்காக, குமார் தன் பெற்றோருடன் போலந்து நாட்டுக்குச் சென்றான்.
![]() |
அங்கு உக்ரைன் மக்கள் மையத்துக்குச் சென்ற குமார், பள்ளி மாணவ – மாணவியரிடம் இப்பொருள்களை வழங்கினான். ‘கலர் பென்சில், மார்க்கர் மற்றும் வண்ணம் தீட்டும் புத்தகம் உள்ளிட்டவற்றை உக்ரைன் குழந்தைகளுக்கு வழங்கினேன்.
இவை அனைத்தும், போல்டன் நகரில் திரட்டிய நிதி வாயிலாக வாங்கப்பட்டவை’ என குமார் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளான்.
போலந்து நாட்டின் கிரகோவ் நகருக்கு வந்த குமாரை, தன் நாட்டுக்கு வரும்படி உக்ரைன் துாதரக அதிகாரி வைசெஸ்லாவ் வோஜ்னாரோவ்ஸ்கிஜ் அழைப்பு விடுத்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement