இந்திய அளவில் டிரெண்டிங்கில் மாஸ் காட்டும் துருவா சர்ஜாவின் மார்டின் பட டீசர் !

Martin Movie Teaser Trending: Vasavi Enterprises சார்பில் தயாரிப்பாளர் உதய்.K மேத்தா தயாரிப்பில், ஆக்சன் கிங் அர்ஜுன் கதையில், இயக்குநர் AP அர்ஜுன் இயக்கத்தில், கன்னட துருவா சர்ஜா நடிப்பில், பிரமாண்டமான பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ளது, ‘மார்டின்’ திரைப்படம்.

இந்திய அளவில் ரசிகர்களிடம் பெரும் ஆவலை தூண்டியிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா, பிப்ரவரி 23ஆம் தேதி, பெங்களூரு ஓரியன் மாலில் கோலாகலமாக நடைபெற்றது.  இவ்விழாவினில், தயாரிப்பாளர் உதய்.K மேத்தா, ‘ஆக்சன் கிங்’  அர்ஜுன், இயக்குநர் AP அர்ஜுன், நாயகன் துருவா சர்ஜா, நாயகி வைபவி சாண்டில்யா, அன்வேஷி ஜெயின் உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் ஆக்சன் அதகளமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர், திரை கொள்ளாத ஆக்சன் காட்சிகளின் பிரமாண்டத்தையும், துருவா சர்ஜாவின் கதாப்பாத்திரத்தையும், படத்தை பற்றிய சிறு அறிமுகத்தை தருவதாகவும் அமைந்திருந்தது.  இவ்விழாவில் வெளியிடப்பட்ட  டீசரை ரசிகர்கள் உற்சாக கரவொலியுடன் வரவேற்றனர். 

வெளியான நொடியிலிருந்து இணையம் முழுக்க தீயாக பரவி வரும் டீசரை, இந்தியா முழுக்கவே ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்க்ள். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் உருவான இப்படத்தின் டீசர் வெளியான நாளிலிருந்து இன்றுவரை டிரெண்டிங்கில் இருந்து வருவது குறிப்பிடதக்கது.

நடிகர்களாக துருவா சர்ஜா, வைபவி சாண்டில்யா, அன்வேஷி ஜெயின், சிக்கண்ணா, மாளவிகா அவினாஷ், அச்யுத் குமார், நிகிதின் தீர், நவாப் ஷா, ரோஹித் பதக் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். 

படத்தின் வசனத்தையும் இயக்குநர் AP அர்ஜுன் எழுதிய நிலையில், எழுத்துக்குழுவில் ஆகியோர் சுவாமிஜி, கோபி பணியாற்றியுள்ளனர். பிரபல இசையமைப்பாளர் மணி சர்மா பாடல்களுக்கு இசையமைக்க, பின்னணி இசை மற்றும் ஒலி வடிவமைப்பு ஆகிய பணிகளை கேஜீஎஃப் படங்களின் இசையமைப்பாளரான ரவி பஸ்ரூர் மேற்கொண்டுள்ளார்.

ஒளிப்பதிவாளராக சத்யா ஹெக்டே, படத்தொகுப்பாளராக கேஎம் பிரகாஷ் மற்றும் மக்கள் தொடர்பில் சதீஷ் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.