திருச்சி மாவட்டத்தில் இந்நாள் கணவனை விட்டுவிட்டு முன்னாள் காதலுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் பெரிய மிளகு பாறை பகுதியை சேர்ந்தவர் 25 வயதுடைய இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவரும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ஆனால் இந்தப் பெண் திருமணத்திற்கு முன்பு வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து திருமணத்திற்கு பிறகும் இளம்பெண் காதலுடன் அடிக்கடி பேசி இவர்களது காதலை வளர்த்து வந்துள்ளார்.
இதையறிந்த இளம்பெண்ணின் கணவர் கண்டித்துள்ளார். இருப்பினும் வாலிபருடன் இளம்பெண் பேசி வந்ததால் அடிக்கடி கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது இளம்பெண் வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் ஓட்டம் பிடித்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து இளம் பெண்ணின் தாயார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், காதலுடன் ஓட்டம் பிடித்த இளம் பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.