ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இன்று மாலை 6 மணி வரை பிரச்சாரம் நடைபெறுகிறது. மாலை 5 மணியுடன் பிரச்சாரம் முடிவடைந்தாக கூறப்பட்ட நிலையில் மேலும் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்வதால் அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
