வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: புதிய கல்விக் கொள்கை முறை எதிர்காலத்தை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: புதிய கல்விக் கொள்கை முறை எதிர்காலத்தை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. கல்வி முறை முந்தைய காலங்களில் கடினத்தன்மை கொண்டதாக இருந்தது. ஆனால் புதிய கல்வி கொள்கை அதை மாற்றி அமைத்துள்ளது. ஆசிரியர்களின் ஆதரவுகள் எங்களுக்கு அதிகம். இது நமது கல்வித்துறை வளர்ச்சிக்கு வழி வகுத்தது.
ஆசிரியர்கள் பங்கு மாணவர்களுக்கு வகுப்பறையில் பாடம் கற்பித்தல் மட்டும் அல்ல. இந்த எண்ணத்தை ஆசிரியர்கள் அகற்ற வேண்டும். தற்போது தொழில் நுட்பத்தால் உலகம் தங்கள் கையில் உள்ளது. மாணவர்களுக்கு வாழ்க்கைக்கு தேவையான அனைத்து தொழில் நுட்பத்தையும் கற்பிக்க வேண்டும்.

இந்த பட்ஜெட்டில் கல்வி முறையின் மீது கவனம் செலுத்துப்பட்டுள்ளது. இது அடித்தளத்தை உருவாக்கியுள்ளது. மேலும் புதிய தொழில்நுட்பம் கொண்ட புதிய வகுப்பறைகளை உருவாக்க, இந்த பட்ஜெட்டில் சிறப்பு திட்டங்கள் உள்ளது.
அம்ரித் கால் பட்ஜெட்டில், இளைஞர்களின் எதிர்காலத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் இளைஞர்களின் தேவைக்கேற்ப, புதிய கல்வி கொள்கை முறையில்,சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement