ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் கைலாசா பெண் பிரதிநிதி! வைரலாகும் புகைப்படம்

ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் கைலாசா பெண் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. 

கைலாசா

திருவண்ணாமலையில் சாதாரண குடும்பத்தில் பிறந்து பசுபிக் பெருங்கடலில் தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, அதற்கு கைலாசா எனப் பெயரிட்டு விஸ்வரூபம் எடுத்தவர் சாமியார் நித்யானந்தா.

சமீபத்தில் அமெரிக்காவின் நெவார்க் நகரம் கைலாசாவை தனி நாடாக அங்கீகரித்துள்ளதாக தகவல் வெளியானது.   

ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் கைலாசா பெண் பிரதிநிதி! வைரலாகும் புகைப்படம் | Massive Women Representation From Kailasa

ஐக்கிய நாடுகள் சபை கூட்டம்

 அதன்படி கடந்த 22-ந்திகதி ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டம் நடந்துள்ளது. 

இந்த கூட்டத்தில் கைலாசா சார்பில் ஐ.நா.வுக்கான கைலாசாவின் நிரந்தர தூதர் மா விஜயபிரியா நித்யானந்தா, கைலாசா லாஸ்ஏஞ்சல்ஸ் தலைவர் மா முக்திகா ஆனந்தா, கைலாசா செயிண்ட் லூயிஸ் தலைவர் மா சோனா காமத், மா நித்யா ஆத்மநாயகி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். 

இவர்கள் பல நாடுகளில் இருந்தும் வந்திருந்த பெண் பிரதிநிதிகளுடன் உரையாடிய அவர்களுக்கு நித்யானந்தாவின் புத்தகங்களை பரிசாக வழங்கியுள்ளனர். 

ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் கைலாசா பெண் பிரதிநிதி! வைரலாகும் புகைப்படம் | Massive Women Representation From Kailasa

வைரல் புகைப்படம்

இந்தநிலையில் முன்னதாக கூட்ட அரங்கில் நித்யானந்தாவின் புகைப்படத்தை வைத்து அதனை வழிபடுவது போன்ற ஒரு புகைப்படத்தை கைலாசாவின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். 

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் கைலாசா பெண் பிரதிநிதி! வைரலாகும் புகைப்படம் | Massive Women Representation From Kailasa

ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் கைலாசா பெண் பிரதிநிதி! வைரலாகும் புகைப்படம் | Massive Women Representation From Kailasa

ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் கைலாசா பெண் பிரதிநிதி! வைரலாகும் புகைப்படம் | Massive Women Representation From Kailasa

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.