கனடா பாஸ்போர்ட்டை துறக்கும் இந்தி நடிகர் அக்சய் குமார்

கனடா குடியுரிமை குறித்து அடிக்கடி விமர்சனங்களை சந்தித்து வரும் பாலிவுட் நடிகர் அக்சய் குமார், பாஸ்போர்ட் மாற்றத்திற்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்தியாதான் எனக்கு எல்லாமே! நான் சம்பாதித்ததெல்லாம் இங்கிருந்துதான். இந்தியாவில் வேலை இன்றி இருந்தபோது, நண்பர் உதவியால் கனடா பாஸ்போர்ட் பெற்றிருந்தேன். அதை இப்போது துறக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.