காமெடியில் ஜெயித்தாரா மிர்ச்சி சிவா.?: 'சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்' விமர்சனம்.!

தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் கலக்கும் மிர்ச்சி சிவா தற்போது ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்’ என்ற படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் விக்னேஷ் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். லார்க் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் தயாரித்துள்ள ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்’ படம் நேற்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்’ மிர்ச்சி சிவாவுடன் மேகா ஆகாஷ், அஞ்சு குரியன், ஷா ரா, மாகாபா ஆனந்த், திவ்யா கணேஷ், மொட்ட ராஜேந்திரன், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் நீண்ட இடைவேளைக்கு பின்னர் பாடகர் மனோ இந்தப்படத்தில் நடித்துள்ளார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இன்ஜினியரிங் படித்து முடித்து வேலை கிடைக்காமல் இருக்கும் சிவா உணவு டெலிவரி செய்து வருகிறார். ஷா ரா புதிய தொழில் நுட்பத்தில் சாப்ட்வேர் ஒன்றை உருவாக்குகிறார். இது எதிர்பாராமல் மிர்ச்சி சிவாவின் கைகளில் கிடைக்கிறது. இதனால் அவர் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை கலகலப்புடன் சொல்லியுள்ளது இந்தப்படம்.

படம் முழுக்க தனது பாணியில் ஒன் லைன் பஞ்ச் டையலாக் பேசி ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார் மிர்ச்சி சிவா. சாப்ட்வேட் தொழில்நுட்பம் மூலம் பேசும் பெண்ணாக வரும் மேகா ஆகாஷுடன் இவருக்கு நடக்கும் உரையாடல்களும் கலகலப்பாக செல்கிறது. படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் சொன்னதை போல, படம் முழுக்க மிர்ச்சி சிவா, மேகா ஆகாஷ் சந்திக்காத காட்சிகள் தான் ஹைலைட்.

Leo: ப்ளிஸ் இதை பண்ணாதீங்க: ‘லியோ’ படத்தால் வம்பில் மாட்டிய பிரபலம்.!

நீண்ட இடைவேளைக்கு பிறகு மிர்ச்சி சிவாவின் அப்பாவாக திரையில் தோன்றியுள்ள மனோவின் காமெடி காட்சிகள் ‘சிங்கார வேலன்’ மனோவை நியாபகப்படுத்துகின்றன. தன் பங்குங்கு அவரும் நகைச்சுவையில் அதகளம் செய்துள்ளார். அஞ்சு குரியன் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்து பாஸ் மார்க் வாங்கியுள்ளார்.

படம் ஆரம்பிக்கும் போதே லாஜிக்கை எதிரபார்க்காதீர்கள் என சொல்லிவிடுவதால் படம் முழுக்க ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள். அதிலெல்லாம் நம்மை கவனம் செலுத்த விட முடியாமல் நகைச்சுவை காட்சிகளால் படத்தை கொண்டு சென்றுள்ளார் இயக்குனர். மொத்தத்தில் லாஜிக்கை எல்லாம் தாண்டி வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் படமாக பாஸ் மார்க் வாங்கியுள்ளது மிர்ச்சி சிவாவின் இந்த ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்’.

Jailer: ‘ஜெயிலர்’ படப்பிடிப்பில் இருந்து வெளியான வீடியோ: தரமான செய்கை.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.