
குட் மார்னிங் அமெரிக்கா நிகழ்ச்சியில் ராம்சரண்
அமெரிக்க தொலைக்காட்சியில் புகழ்பெற்ற நிகழ்ச்சி குட் மார்னிங் அமெரிக்கா. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ராம்சரண் கலந்து கொண்டுள்ளார். இதில் தொகுப்பாளர்களின் கேள்விகளுக்கு எந்த தயக்கமும் இல்லாமல் ராம்சரண் பதிலளித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இதன் மூலம் தென்னிந்திய நடிகர்களில் முதன்முறையாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலம் என்ற பெருமையை ராம் சரண் பெற்றிருக்கிறார். இந்நிலையில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ராம்சரண், ‛‛ராஜமௌலி அடுத்ததாக மகேஷ்பாபு நடிப்பில் பிரம்மாண்ட படம் ஒன்றை இயக்க இருக்கிறார். விரைவில் அவர் ஹாலிவுட் படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது'' என்றார்.