சென்னை: டி.என்.பி.எஸ்.சியின் அலட்சியமே காரணம் குளறுபடிக்கு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். அதுபோல டிஎன்பிஎஸ்சியின் குளறுபடி காரணமாக, 55,000 தேர்வர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளதாக டிடிவி தினகரன் குற்றம் சாட்டி உள்ளார். இன்று நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி தொகுதி இரண்டுக்கான முதன்மைத் தேர்வை நடத்துவதில் ஏராளமான ‘குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் தேர்வு தாமதமாக தொடங்கியது. […]
