கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் திருப்பதி என்பவர் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். அதே கல்லூரியில் அவரது தங்கை உறவுமுறை கொண்ட பெண் ஒருவர் பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் பி.ஏ மூன்றாம் ஆண்டு படிக்கும் லிங்கேஸ்வரன் என்பவர் மாணவியை காதலிப்பதாக கூறி தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்ததால் இரு தரப்பினரிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருப்பதி நேற்று லிங்கேஸ்வரனிடம் இந்த பிரச்சனை குறித்து கேட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில் லிங்கேஸ்வரன் பிளேடால் திருப்பதியில் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த திருப்பதி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் லிங்கேஸ்வரனை தீவிரமாக தேடி வருகின்றனர்.