திருச்சி: திருச்சி காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்துள்ளனர். கொள்ளிடம் ஆற்றில் இரவு நேரங்களில் ,மணல் அள்ளப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக லால்குடி டிஎஸ்பி-க்கு ரகசிய தகவல் கிடைத்தது. ரகசிய தகவலை அடுத்து பூக்கொல்லை பகுதியில் திடிரென சோதனை மேற்கொண்டார். மணல் கடத்தலில் இடைப்பட்ட முருகன், பாலமுருகன் ஆகியோர் கைது செய்து பொக்லைன், லாரி, பல லட்சம் மதிப்புள்ள மணல் ஆகியவை பறிமுதல் செய்துள்ளனர்.
