ஜப்பானில் வடக்கு பகுதியில் உள்ள முக்கிய தீவுப்பகுதியான ஹொக்கைடோ பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்க ஏற்பட்டுள்ளது.
பல்வேறு இடங்களில் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்தனர். கடலோர நகரங்களான குஷிரோ மற்றும் நெமுரோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கம் ஜப்பான் நேரப்படி இரவு 10.27 மணிக்கு, சுமார் 43 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. கட்டிடங்களின் சேதம் மற்றும் உயிர் சேதம், காயங்கள் பற்றிய தகவல் ஏதும் வெளிவரவில்லை.
அண்மையில் துருக்கி மற்றும் சிரியா எல்லைப் பகுதியில் நிகழ்ந்த நிலநடுக்கங்களால் 50,000 மக்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.