ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு இலவசங்கள், பணம் வாரி இறைக்கப்பட்டு வரும் நிலையில், அதுதொடர்பாக ராஜேஸ் கண்ணன் என்பவர் ஒட்டியுள்ள போஸ்டர் அதகளப்படுத்தி வருகிறது. சமூக வலைதளங்ளிலும் வைரலாகி வருகிறது. நேர்மையான தேர்தல் அதிகாரிகளுக்கு ரூ.1 கோடி பரிசு என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுதினம் நடக்கிறது. இதற்கான பிரச்சாரம் இன்று (சனிக்கிழமை) முடிவடையவுள்ள நிலையில், திமுக மற்றும் அதிமுகவினர் உள்பட அரசியல் கட்சியினரும் இறுதிக்கட்ட, பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி யுள்ளனர். […]
