வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பாட்னா: பீஹாரில் சட்ட ஒழுங்கு இல்லை. ஆனால் நிதிஷ் குமார் ஏன் எப்போதும் அமைதியாக இருக்கிறார்? என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

பீஹார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: பீஹார் மாநிலம் மோசமான நிலையில் உள்ளது. அங்கு சட்டம் ஒழுங்கு இல்லை. அரசுக்கு எதிராக பேசும் பத்திரிக்கையாளர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். நிதிஷ் குமார் ஏன் எப்போதும் அமைதியாக இருக்கிறார்?.
ஆனால் நிலைமையை சரி செய்ய பிரதமர் மோடி பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவை தடை செய்தார். 3ல் 2 பங்கு பேர் நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக்குவதுதான் பீஹாரில் காட்டாட்சியை அழிக்க ஒரே வழி என்று கூறுகின்றனர். ஒவ்வொரு நாளும் கற்பழிப்பு மற்றும் கொலை பற்றிய செய்திகளைக் கேட்கிறோம். பீஹார் மக்கள் நிதிஷ் குமாருக்கும் அவரது அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

போலி மது விற்பனையை தடுக்க வேண்டும். பீஹாருக்கு 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான 3 திட்டங்களை பிரதமர் மோடி வழங்கினார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் லாலு பிரசாத், நிதிஷ் குமார் ஆகியோர் ஆட்சியில் இருந்தபோது பீஹாருக்கு எவ்வளவு பணம் கொடுத்தார்கள்?. இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement