மன்னிப்பா? ஒருபோதும் இல்லை… மன்னர் சார்லஸ் – இளவரசர் வில்லியம் திட்டவட்டம்


தமது வாழ்க்கையில் ஏற்பட்ட நெருக்கடிகளுக்காக பிரித்தானிய ராஜ குடும்பம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற இளவரசர் ஹரியின் கோரிக்கையை மன்னர் சார்லஸ் மற்றும் இளவரசர் வில்லியம் ஆகியோர் நிராகரித்துள்ளதாகவே கூறப்படுகிறது.

விழாவில் ஹரி – மேகன் தம்பதி

சார்லஸ் மன்னரின் முடி சூட்டு விழாவிற்கு இன்னும் சுமார் 70 நாட்களே எஞ்சியுள்ளது. எதிர்வரும் மே மாதம் 6ம் திகதி பிரித்தானியாவின் புதிய மன்னராக சார்லஸ் முடி சூடவிருக்கிறார்.

மன்னிப்பா? ஒருபோதும் இல்லை... மன்னர் சார்லஸ் - இளவரசர் வில்லியம் திட்டவட்டம் | Charles William Harry The Apology

@AP

முறைப்படி இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதிக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றே பிரித்தானிய ராஜ குடும்பத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் ஹரி – மேகன் தம்பதி இந்த விழாவில் கலந்துகொள்வார்களா என்பது தொடர்பில் இதுவரை உறுதியான தகவல் இல்லை.

மேலும், ஹரி கோரிக்கை விடுத்துள்ளபடி மன்னர் சார்லஸ் அல்லது இளவரசர் வில்லியம் இருவரில் ஒருவர் கூட மன்னிப்பு கேட்கும் மன நிலையில் இல்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.

ஹரியின் கருத்துக்களால் ராஜ குடும்பத்தில் ஏற்பட்டுள்ள விவாதம் இன்னும் தணியவில்லை என்றே கூறப்படுகிறது.
இதனிடையே, முடி சூட்டு விழாவிற்கான விருந்தினர்கள் எண்ணிக்கையும் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது.

மன்னிப்பா? ஒருபோதும் இல்லை... மன்னர் சார்லஸ் - இளவரசர் வில்லியம் திட்டவட்டம் | Charles William Harry The Apology

@AP

இளவரசர் ஹரிக்கு உரிமை அளிக்கப்பட்டுள்ளது

பிரித்தானிய மக்கள் விலைவாசி உயர்வால் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் நிலையில் ஆடம்பர விழாவிற்கு மன்னர் சார்லஸ் தயாரில்லை என்றே கூறப்படுகிறது.
இந்த நிலையில், 2,000 சிறப்பு விருந்தினர்களுக்கு முடி சூட்டு விழாவிற்கான திகதியை நினைவுப்படுத்தும் அட்டைகள் அனுப்பி வைக்கப்படும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், விழாவிற்கு வர ஒப்புதல் அளிக்கும் விருந்தினர்களுக்கு முறைப்படியான அழைப்பிதழ் அனுப்பப்பட உள்ளது.
இளவரசர் ஹரியை பொறுத்தமட்டில், குடும்ப நிகழ்ச்சிகள் அனைத்திலும் கலந்துகொள்ளும் உரிமை அளிக்கப்பட்டுள்ளது.

மன்னிப்பா? ஒருபோதும் இல்லை... மன்னர் சார்லஸ் - இளவரசர் வில்லியம் திட்டவட்டம் | Charles William Harry The Apology

@WireImage

ராஜ குடும்பம் தொடர்பில் ஹரி கடுமையான விமர்சனங்கள் முன்வைத்திருந்தாலும், முடி சூட்டு விழாவில் அவருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றே கூறுகின்றனர்.

இதனையடுத்து, எதிர்வரும் வாரங்களில் ஹரி- மேகன் தம்பதியிடம் விழா தொடர்பில் கலந்து பேசுவார்கள் என்றே அரண்மனை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.