
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து சம்பத் நகர், பெரிய வலசு, சக்தி ரோடு, மஜித் வீதி, காந்திசிலை ஆகிய இடங்களில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது இடைத்தேர்தல் நடைபெறுவதற்கான காரணத்தை கூறினார். ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருமகன் ஈவேரா திடீரென்று அகலா மரணமடைந்து விட்டார். இந்த தொகுதியில் உள்ள மக்கள் எல்லாம் வேதனையடைந்தனர். இந்த சூழ்நிலையில் இடைத்தேர்தல் நடக்கிறது.

தந்தை இழந்து அந்த இடத்தை நிரப்ப மகன் வருவார். மகன் இறந்து அந்த இடத்தை பூர்த்தி செய்ய ஈவிகேஎஸ் இளங்கோவன் வந்திருக்கிறார். மாபெரும் வெற்றியைத் தரவேண்டும். திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள், உறுதிமொழிகளை நிறைவேற்றி தருவோம் என்று வாக்களித்தீர்கள். திமுக ஆட்சி பொறுப்பேற்று மிகப்பெரிய சாதனைகளை செய்துள்ளது.
பிரசாரத்தின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கலைஞர் பிறந்தது திருவாரூராக இருந்தாலும் குருகுலமாக இருந்தது ஈரோடு. சம்பத் நகரில், ஈ.வி.கே.எஸ். சம்பத் மகனுக்கு வாக்கு சேகரித்து கலைஞர் மகன் வந்துள்ளேன். திமுகவின் அடித்தளமே ஈரோடு தான், மகனின் கடமையை செய்து முடிக்க தந்தை வந்துள்ளார். குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும் என மார்ச் மாதம் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும். இவ்வாறு கூறினார்.
இந்நிலையில், இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை குறித்து முதலமைச்சர் அறிவித்தது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என கூறி அதிமுக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் மனு அளித்துள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமாரை சந்தித்து, அதிமுகவை சேர்ந்த இன்பதுரை புகார் மனு அளித்தார்.