ஹோட்டல் முன்பதிவு அடிப்படையில் 6 மாத சுற்றுலா விசா: இந்தியாவுக்கு சிறப்பு சலுகை அறிவித்த பிரபல நாடு


ஹோட்டல் முன்பதிவு அடிப்படையில் இந்தியர்கள் 6 மாத கால சுற்றுலா விசாவை பெறலாம் என ரஷ்யா அறிவித்துள்ளது.

எளிமையாகும் விசா நடைமுறை

இந்தியா உட்பட 19 நாடுகளுக்கு விசா நடைமுறையை எளிதாக்கும் நடைமுறை ஆணையில் ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டின் செவ்வாயன்று கையெழுத்திட்டுள்ளார்.

கடந்த வாரம் 11 நட்பு நாடுகளின் குடிமக்களுக்கு விசா இல்லாத பயணத்தையும், மேலும் 6 நட்பு நாடுகளின் குடிமக்களுக்கான நுழைவு கட்டுப்பாட்டை எளிதாக்கவும் ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் செர்ஜி தெரிவித்து இருந்தார்.

iStockiStock

மேலும் கோவிட் தாக்குவதற்கு முன்னர் அறிமுகப்படுத்திய இ-விசா திட்டத்தை மீண்டும் தொடங்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாகவும் ரஷ்ய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய விசா நடைமுறையில் இந்தியா, பஹ்ரைன், கம்போடியா, சீனா, இந்தோனேசியா, ஈரான், கொரியா ஜனநாயக மக்கள் குடியரசு, குவைத், மலேசியா, மெக்சிகோ, மியான்மர், சவுதி அரேபியா, தாய்லாந்து, துருக்கி மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் அடங்கும்.

6 மாத கால சுற்றுலா விசா

அரசாங்க போர்ட்டலில் வெளியிடப்பட்ட ஆணை படி, குறிப்பிட்ட நாடுகளின் குடிமக்கள் ஹோட்டல் முன்பதிவு செய்திருந்தால், ஆறு மாதங்கள் வரை சுற்றுலா விசாவை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோட்டல் முன்பதிவு அடிப்படையில் 6 மாத சுற்றுலா விசா: இந்தியாவுக்கு சிறப்பு சலுகை அறிவித்த பிரபல நாடு | Russia Approves New Tourist Visa Regime IndiansReuters 

ரஷ்ய கூட்டமைப்பின் ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீஸின் எல்லைக் காவலர் சேவையின் சமீபத்திய தரவுகளின்படி, 2022 இல் ரஷ்ய நாட்டுக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை 2022 இல் 96.1% குறைந்துள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.