Devayani: தேவயானிக்கு அவ்வளவு டார்ச்சர் கொடுத்தார்… பிரபல இயக்குநரை கிழித்து தொங்கவிட்ட விஜயலட்சுமி!

நடிகை தேவயானிக்கு பிரபல இயக்குநர் படப்பிடிப்பில் டார்ச்சர் கொடுத்த விவகாரத்தை அம்பலப்படுத்தியுள்ளார் நடிகை விஜயலட்சுமி.

விஜயலட்சுமிதமிழ் மற்றும் கன்னட சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை விஜயலட்சுமி. கர்நாடகாவை பூர்விகமாக கொண்ட நடிகை விஜயலட்சுமி, நாகமண்டலா என்ற கன்னட படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான விருதை பெற்ற விஜயலட்சுமி, அடுத்தடுத்து கன்னட படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். ​ நீங்காத சோகத்தை கொடுத்த ஸ்ரீதேவி!​
பூந்தோட்டம்தமிழ் சினிமாவில் பூந்தோட்டம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் விஜயலட்சுமி. களஞ்சியம் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் முரளி, தேவயானி, ரகுவரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தொடர்ந்து கன்னடம் மற்றும் தமிழ் சினிமாவில் பிஸியாக இருந்த நடிகை விஜயலட்சுமி, ஃபிரண்ட்ஸ் படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கையாகவும் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாகவும் நடித்தார்.
​ Rajinikanth: தலைசுற்ற வைக்கும் ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு… கார்கள் மட்டுமே அத்தனை கோடிகளாம்!​
சீமான் தொடர்ந்து கலகலப்பு, ராமச்சந்திரா, மிலிட்டரி, எஸ் மேடம், சூரி, வாழ்த்துகள், பாஸ் என்கிற பாஸ்கரன், தில்லாலங்கடி, தம்பிக்கோட்டை , கதை சொல்ல போறோம், மீசைய முறுக்கு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் இயக்குநருமான சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னோடு வாழ்ந்து விட்டு தன்னை ஏமாற்றி விட்டதாக குற்றம்சாட்டிய விஜயலட்சுமி, அடிக்கடி அவர் குறித்த வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
​ அந்தரங்க இடத்தில் கை வைத்தார்… கிரிக்கெட் வீரர் மீது பிரபல நடிகை பகீர் புகார்!​
தேவயானிக்கு தொல்லைஇந்நிலையில் நடிகை விஜயலட்சுமி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இயக்குநர் களஞ்சியம், நடிகை தேவயானிக்கு கொடுத்த டார்ச்சர் குறித்து பேசி பரபரப்பை கிளப்பியுள்ளார் விஜயலட்சுமி. அந்த வீடியோவில் பேசியிருக்கும் விஜயலட்சுமி கடந்த வாரம் மீடியாவை சேர்ந்த ஒருவர் தனக்கு போன் செய்து, உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதாக இயக்குநர் களஞ்சியம் கூறுகிறாரே உண்மையா? என்று கேட்டுள்ளார்.
​ Nayanthara: கண்களை கூசச் செய்யும் நயன்தாராவின் ஹாட் க்ளிக்ஸ்!​
இயக்குநர் களஞ்சியம்அதற்கு, எனக்கு திருமணம் ஆகியிருந்தால் நான் ஏன் சீமானோடு சண்டை போடப்போகிறேன்? என் திருமண வாழ்க்கையைதான் நாசம் செய்து விட்டார்களே? திருமணம் ஆகியிருந்தால் என் கணவர், என் குழந்தை என்றல்லவா இருந்திருப்பேன். சீமானோடு இருக்கும் களஞ்சியம் பொய் தகவல்களை கூறி வருகிறார். களஞ்சியம் இயக்கத்தில் வெளியான பூந்தோட்டம் படத்தில் நான் நடித்திருக்கிறேன்.
​ Sridevi: மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் அரிய புகைப்படங்கள்!​
கண்ணால் பார்த்தேன்அந்தப் படத்தில் நடித்த போது தேவயானிக்கு அவர் எப்படி டார்ச்சர் கொடுத்திருக்கிறார் என்பதை நான் என் கண்ணால் பார்த்திருக்கிறேன். ஆகையால் அவரை அடக்கி வாசிக்க சொல்லுங்கள். எனக்கு எதுவும் தெரியாது என்று நினைத்து இப்படி அவதூறு பேச வேண்டாம். சீமான் இப்படி அவதூறாக பேசியதால்தான் கோபத்தில் எல்லாத்தையும் ரிலீஸ் செய்து, சாத்து சாத்துன்னு சாத்தினேன். திரும்பவும் அந்த மாதிரி வேண்டாம் என்று நினைக்கிறேன்.
​ Mayilsamy, Ajith: அஜித்தையும் உலுக்கிய மயில்சாமியின் மரணம்.. ​
பெண் சாபம் சும்மாவிடாதுசீமானுக்கும் சொல்லி அனுப்பியிருக்கிறேன். அவரும் எனக்கு திருமணம் ஆகிவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறாராம். நாம் தமிழர் கட்சிக்காரர்கள் என்னை கொச்சை கொச்சையாக திட்டியதை கூட கை தட்டி ரசித்தார் சீமான். பெண் சாபம் அவரை சும்மாவிடாது, தலைமுறை தலைமுறையாய் அடிக்கும். இந்த ஜென்மம் இல்லை, எந்த ஜென்மத்திலும் சீமான் அரசியலில் ஜெயிக்கவும் முடியாது தலைத்தூக்கவும் முடியாது என விளாசியுள்ளார் விஜயலட்சுமி. விஜயலட்சுமியின் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
​ Mayilsamy, Ajith: எம்ஜிஆர் ரசிகர்களுக்கு உங்களை பிடிக்கும் … அஜித்தை உருக வைத்த மயில்சாமி!​
விஜயலட்சுமி வீடியோ
Vijayalakshmi

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.