Leo: ப்ளிஸ் இதை பண்ணாதீங்க: 'லியோ' படத்தால் வம்பில் மாட்டிய பிரபலம்.!

விஜய் தற்போது ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். கடந்த மாதம் வெளியான ‘வாரிசு’ படத்தினை தொடர்ந்து விஜய் நடிப்பில் இந்தப்படம் உருவாகி வருகிறது. மேலும் கோலிவுட் தற்போது அதிகம் எதிர்பார்க்கும் படமாக ‘லியோ’ உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இதன் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

கடந்த வருடம் வெளியான ‘விக்ரம்’ படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். கமல், பகத் பாசில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான இந்தப்படத்தில் சூர்யா கேமியோ ரோலில் நடித்து மிரட்டியிருந்தார். இந்தப்படம் ஒட்டுமொத்த கோலிவுட் திரையுலகையே கலக்கியது. வசூலிலும், விமர்சனரீதியாகவும் இந்தப்படத்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்தது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

‘விக்ரம்’ படத்தினை தொடர்ந்து லோகேஷ் இயக்கவுள்ள படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியது. ‘இந்தப்படத்திற்கு பிறகு லோகேஷ் விஜய்யை இயக்கவுள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே தகவல்கள் வெளி வந்தாலும், வாரிசு பட ரிலீசுக்காக படக்குழு காத்திருந்த்து. ‘வாரிசு’ பட ரிலீசை தொடர்ந்து வீடியோவுடன் ‘லியோ’ என்ற டைட்டிலை வெளியிட்டு மிரட்டினர் படக்குழுவினர்.

இந்தப்படம் லோகேஷின் சினிமாட்டிக் யுனிவர்சிட்டியில் உருவாகி வருகிறதா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது. அதாவது லோகேஷின் முந்தைய படங்களின் கதாபாத்திரங்கள் அவரது அடுத்த படத்திலும் இடம்பெறுவது லோகேஷின் எல்யூசி என அழைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தப்படத்தில் பணிபுரியும் லோகேஷின் நெருங்கிய நண்பரும், இயக்குனருமான ரத்னகுமார் பகிரும் புகைப்படங்களை டிகோட் செய்து ‘லியோ’ எல்யூசியில் உருவாகி வருவதாக பலரும் கூறி வருகின்றனர்.

Sai Pallavi: விஜய், அஜித் பட வாய்ப்பை உதறி தள்ளிய சாய் பல்லவி: அதிர வைக்கும் காரணம்.!

அவர் பகிர்ந்த புகைப்படங்களை வைத்து லியோவில் கமலின் விக்ரம் கதாபாத்திரம் மற்றும் விஜய் சேதுபதியின் சந்தானம் கதாபாத்திரம் இடம்பெற்றிருப்பதாக இணையத்தில் பலரும் கமெண்ட் அடித்து வந்தனர். இந்நிலையில் தற்போது காஷ்மீரில் நாயுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, இது வெறும் புகைப்படம். தயவுசெய்து யாரும் டிகோட் செய்ய வேண்டாம் என கிண்டலுடன் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Rajinikanth:என்றுமே ஒரே சூப்பர் ஸ்டார்: ஆணித்தரமாக நிரூபித்த ரஜினிகாந்த்..!

‘லியோ’ படத்தில் விஜய்யுடன் நீண்ட இடைவேளைக்கு பிறகு திரிஷா இணைந்துள்ளார். மேலும், பிரபல் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், இயக்குனர்கள் மிஷ்கின், கெளதம் மேனன் மற்றும் அர்ஜுன், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் இந்தப்படத்தில் நடித்து வருகின்றனர். செவன் ஸ்கீரின் ஸ்டுடியோ தயாரிக்கும் ‘லியோ’ படத்திற்கு அனிருத் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram A post shared by Rathna Kumar (@mr.rathna)

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.