Mayilsamy: மயில்சாமி வீட்டு மீன் குழம்புக்கு ரசிகர்களான ரஜினியும் கமலும்…

நடிகர் மயில்சாமி வீட்டு மீன் குழம்புக்கு ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் ரசிகர்களாய் இருந்த தகவல் வெளியாகியுள்ளது.

மயில்சாமிபிரபல நகைச்சுவை நடிகரான மயில்சாமி கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீர் மாரடைப்பால் காலமானார். 57 வயதே ஆன மயில்சாமியின் மரணம் தமிழ் திரையுலகில் பெரும் அதிவலைகளை ஏற்படுத்தியது. மகா சிவராத்திரியை முன்னிட்டு விடிய விடிய கேளம்பாக்கம் மேகநாதேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் மயில்சாமி, அதிகாலை வீட்டிற்கு திரும்பினார்.
​ Devayani: தேவயானிக்கு அவ்வளவு டார்ச்சர் கொடுத்தார்… பிரபல இயக்குநரை கிழித்து தொங்கவிட்ட விஜயலட்சுமி!​
மயில்சாமி மரணம்வீட்டிற்கு வந்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் கோவிலுக்கு புறப்பட்ட மயில்சாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மயில்சாமியின் உயிர் பிரிந்தது. ஏராளமான ஏழை மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளார் மயில்சாமி.
​ நீங்காத சோகத்தை கொடுத்த ஸ்ரீதேவி!​
மீன் குழம்புமயில்சாமி மரணமடைந்து ஒரு வாரம் ஆகவுள்ள நிலையில் பிரபலங்கள் பலரும் அவரது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் மயில்சாமி வீட்டு மீன் குழம்புக்கு நடிகர்கள் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் ரசிகர்களாக இருந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. மயில்சாமி வீட்டில் சமைக்கும் மீன் குழம்பு என்றால் நடிகர்கள் கமல்ஹாசனுக்கும் ரஜினிகாந்துக்கும் கொள்ளை பிரியமாம்.
​ Rajinikanth: தலைசுற்ற வைக்கும் ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு… கார்கள் மட்டுமே அத்தனை கோடிகளாம்!​
மீன் குழம்பு கேட்ட கமல்எப்போது தன் வீட்டில் மீன் குழம்பு சமைத்தாலும் உடனே ரஜினிகாந்துக்கும் கமல்ஹாசனுக்கும் கொண்டு சென்று கொடுத்துவிடுவாராம். ஒரு முறை நடிகர் கமல்ஹாசன், போன் செய்து தனக்கு உடனே மீன் குழம்பு வேண்டும் என கூறி விட்டு போனை கட் செய்து விட்டாராம். அப்போது மயில்சாமியின் மனைவி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தாராம்.
​ அந்தரங்க இடத்தில் கை வைத்தார்… கிரிக்கெட் வீரர் மீது பிரபல நடிகை பகீர் புகார்!​
கண்டுபிடித்த கமல்இதனால் செய்வதறியாது திகைத்த மயில்சாமி, பிரபல ஹோட்டலுக்கு சென்று தன் வீட்டு பாத்திரத்தில் மீன் குழம்பு வாங்கிக் கொண்டு போய் கமலிடம் கொடுத்தாராம். நடிகர் கமல்ஹாசனும் மீன் குழம்பை சுவைத்து சாப்பிட்டு விட்டு கடைசியில், ஹோட்டல் பெயரை சொல்லி, அந்த ஹோட்டலில் வாங்கிய மீன் குழம்பு சுவையாக இருக்கிறது என்றாராம். தனது மனைவிக்கு உடம்பு சரியில்லை என்ற தகவலை கூறாமல், கமலின் ஆசைக்காக ஹோட்டலில் மீன் குழம்பு வாங்கிக் கொடுத்த மயில்சாமியின் மனசை பாராட்டி வருகின்றனர் ரசிகர்கள்.
​ Sridevi: மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் அரிய புகைப்படங்கள்!​
முகத்தை பார்க்காத கமல்நடிகர் மயில்சாமியிடம் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் நெருங்கிய நட்பை கொண்டிருந்தார்கள். மயில்சாமி மரணமடைந்த தகவலை அறிந்ததும் நடிகர் ரஜினிகாந்த், மைசூரில் தனது அண்ணன் பிறந்தநாள் நிகழ்ச்சி மற்றும் ஜெயிலர் படப்பிடிப்பில் இருந்து உடனடியாக சென்னை திரும்பினார். திங்கள் கிழமை காலை அவரது நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் கேளம்பாக்கம் சிவன் கோவிலில் தான் பால் அபிஷேகம் செய்ய வேண்டும் என்ற மயில்சாமியின் கடைசி ஆசையையும் தான் நிறைவேற்றுவேன் என்றும் வாக்குறுதி அளித்தார். ஆனால் கமல்ஹாசன், மயில்சாமியின் முகத்தை கடைசியாக கூட பார்க்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
​ Mayilsamy, Ajith: அஜித்தையும் உலுக்கிய மயில்சாமியின் மரணம்.. ​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.