PSG அணியில் இருந்து வெளியேறும் மெஸ்ஸி: அவரது புதிய அணியின் பெயர் கசிந்தது


அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி புதிய அணி ஒன்றில் மிக விரைவில் இணையவிருக்கிறார் என்ற தகவலை அவரது நெருங்கிய நபர் ஒருவர் கசியவிட்டுள்ளார்.

PSG அணியில் இருந்து

லியோனல் மெஸ்ஸிக்கும் அவரது நண்பர் செர்ஜியோ அகுவெரோவுக்கும் இடையே நடந்த தனிப்பட்ட உரையாடலில், குறித்த தகவலை மெஸ்ஸி குறிப்பிட்டதாகவும் தெரியவந்துள்ளது.

PSG அணியில் இருந்து வெளியேறும் மெஸ்ஸி: அவரது புதிய அணியின் பெயர் கசிந்தது | Lionel Messi Next Club Leaked

@getty

இந்த கால்பந்து சீஸன் முடிவுக்கு வரும்போது PSG அணியில் இருந்து மெஸ்ஸி விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
PSG அணியில் அவரது ஒப்பந்தம் முடிவுக்கும் வரும் நிலையில், புதிதாக ஒப்பந்தம் மேற்கொள்ள PSG அணி நிர்வாகமும் இதுவரை தயாராகாத நிலையில், மெஸ்ஸி வெளியேறுவார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவர் Inter Miami அல்லது பார்சிலோனா அணிக்கே மீண்டும் திரும்பலாம் எனவும் கூறுகின்றனர்.
ஆனால் மெஸ்ஸி முதல் முதலில் கால்பந்து ஆட்டம் கற்றுக்கொண்ட Old Boys அணியில் இணையவே அதிக வாய்ப்பிருப்பதாக செர்ஜியோ அகுவெரோ தெரிவிக்கிறார்.

Old Boys அணியில்

Old Boys-ல் இருந்து தான் மெஸ்ஸி பார்சிலோனா அணியில் இணைந்தார். இது தொடர்பில் செர்ஜியோ அகுவெரோ தெரிவிக்கையில், Old Boys அணியில் இணைவது தொடர்பில் மெஸ்ஸி தீவிரம் காட்டி வருகிறார் என குறிப்பிட்டுள்ளார்.

PSG அணியில் இருந்து வெளியேறும் மெஸ்ஸி: அவரது புதிய அணியின் பெயர் கசிந்தது | Lionel Messi Next Club Leaked

@PA

Old Boys அணியில் நீண்ட 5 ஆண்டு காலம் மெஸ்ஸி செயல்பட்டுள்ளார். இங்கிருந்து தான் பார்சிலோனா அணியின் இளையோருக்கான La Masia அணியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.