இலங்கை பெண்ணை திருமணம் செய்யும் சிம்பு? குடும்பத்தினர் கூறிய விடயம்


இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் மகளை நடிகர் சிம்பு திருமணம் செய்வதாக வெளியான தகவலை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.


சர்ச்சை நாயகன்

பிரபல நடிகர் சிலம்பரசன் தமிழ் திரையுலகில் கைக்குழந்தையாக இருக்கும்போதிலிருந்தே நடித்து வருகிறார்.

தற்போது 40 வயதாகும் சிம்பு பலமுறை காதல் சர்ச்சையில் சிக்கியுள்ளார். சமீபத்தில் நடிகை நிதி அகர்வாலை அவர் திருமணம் செய்துகொள்ளப் போவதாக செய்திகள் உலா வந்தன.

சிலம்பரசன்/Silambarasan

சில நாட்களுக்கு முன்னர் இலங்கை தொழிலதிபர் ஒருவரின் மகளை சிம்பு திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வேகமாக பரவின.

அவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாகவும் கூறப்பட்டது.

குடும்பத்தினர் மறுப்பு

இந்நிலையில் சிம்புவுக்கும், இலங்கை பெண்ணுக்கும் திருமணம் என்கிற செய்தி முற்றிலும் வதந்தி என்றும், அதனை யாரும் நம்ப வேண்டாம் என்றும் சிம்பு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சிலம்பரசன்/Silambarasan

அத்துடன் சிம்புவுக்கு திருமணம் என உறுதியானால் ஊடகங்களுக்கு தான் முதலில் தெரிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.   



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.