
வூகான் மாகாணத்தில் முதற்கட்டப் பரிசோதனை முறையில், அறிமுகம் செய்யப்பட்ட தானியங்கி ரோபோ டேக்சிகள், இந்தாண்டு ஜனவரி வரையில் சுமார் 2 மில்லியன் சவாரிகளைக் கடந்துள்ளதாக சீனாவின் பைடு நிறுவனம் (Baidu) தெரிவித்துள்ளது.
‘அப்போலோ கோ’ (Apollo Go) என்று பெயரிடப்பட்டுள்ள, இந்த திட்டத்தின் மூலம் டாக்சிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தானியங்கி டேக்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், மேலும் சில நகரங்களில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்த தானியங்கி ரோபோ டேக்சி குறித்த நேரத்தில் பாதுகாப்பாக, குறிப்பிடப்பட்ட இடத்தில் அழைத்துச் செல்வதாக பொதுமக்கள் கூறுகின்றனர். அந்த டேக்சியில் பயணம் செய்யும் பயணிகளுக்கான பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரும் வகையில் பல்வேறு புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளது. அதிநவீன வசதிகளுடன் டேக்சி உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தானியங்கி ரோபோ டேக்சிகளின் சேவை பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.