தமிழ்நாடு அரசு குற்ற செயல்களை தடுக்கவும் விபத்துகளில் இடுபட்டவர்களை உடனடியாக கண்டறியவும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு வாகனங்களை இயக்கவும் பொதுமக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தி வருகிறது. சென்னை நகர் முழுவதும் வாகனங்களை கண்காணிக்க 250-க்கும் மேற்பட்ட நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு எளிதில் வாகன பதிவு எண்கள் அந்த கேமராவில் பதிவு செய்து குற்றச் செயல்களில் ஈடுபட்டுவர்களை கண்டறிய வழி செய்யப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக வடசென்னை போக்குவரத்து காவலுக்கு உட்பட்ட பூக்கடை பகுதியில் துணை ஆணையர் ஹர்ஸ் சிங் மற்றும் காவல் உதவி ஆணையர் பாஸ்கரன் உள்ளிட்ட காவல்துறையினர் நேற்று சிறப்பு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
வாகன பதிவு எண்கள் நம்பர் பிளேட் முறையாக அரசு விதிக்குட்பட்டு இல்லாத வாகனங்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர். அப்போது சட்ட விதிகளுக்கு உட்படாமல் பொருத்தப்பட்டிருந்த நம்பர் பிளேட்டுகளையும், நம்பர் பிளேட்டுகளே இல்லாத வாகனங்களையும் தடுத்து நிறுத்தி முதல் முறையாக 500 ரூபாயும் இரண்டாவது முறை பிடிபடும் வாகனங்களுக்கு 1500 ரூபாய் அபராதம் விதித்தனர்.
தொடர்ந்து இதுபோல் வாகனங்களை இயக்கினால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை துணை ஆணையர் ஹர்ஸ் சிங் தெரிவித்தார் .