கடந்த மாதம் 27 ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவின், வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.
சித்தோட்டில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இரண்டு சுற்றுகள் முடிந்து மூன்றாவது சுற்று வாக்கு எண்ணக்கை நடைபெற்று வருகிறது.
முதல்கட்டமாக நடைபெற்ற தபால் வாக்கு எண்ணிக்கை முதலே காங்கிரஸ் கட்சி வேட்பாளர் முன்னிலை பெற்று வருகிறார்.
தபால் வாக்கு எண்ணிக்கை முடிந்து வாக்கு எந்திரத்தில் உள்ள வாக்குக்கள் தற்போது 15 சுற்றுகளாக எண்ணப்பட்டு வருகிறது.
காலை 10.30 மணி நிலவரப்படி :
காங்கிரஸ் – 23321
அதிமுக – 8124
நாம் தமிழர் – 1498
தேமுதிக – 209
நாம் தமிழர் கட்சி ஏற்கனவே பேசப்பட்டதுபோல் மூன்றாவது இடம் பிடித்துள்ளது.
இந்நிலையில் முதல்சுற்று வாக்கு எண்ணிக்கை படி, தேமுதிக வேட்பாளரை விட சுயேச்சை வேட்பாளர் ஒருவர் அதிக வாக்குகளை பெற்று நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
முதல் சுற்று முடிவில் தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 112 பெற்ற நிலையில், அவரைவிட முத்து பாவா 178 வாக்குகள் பெற்று நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.
முதல் சுற்று முடிவில் நோட்டோவுக்கு 42 வாக்குகள் பதிவாகியுள்ளது.