இடைத்தேர்தல் வெற்றி திராவிட மாடல் ஆட்சியை எடைபோட்டு மக்கள் அளித்த வெற்றி என்று முதல் அமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்தார்….
தமிழக முதல் அமைச்சரும், திமுக தலைவருமான முகஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி என்பது திராவிட மாடல் ஆட்சியை எடைபோட்டு மக்கள் அளித்த வெற்றி என்று தெரிவித்தார்..
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளரை தமிழகத்தில் இருந்து எதிர்பார்க்கலாமா ? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, யார் பிரதமராக வர வேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது…. இருக்கக்கூடாது என்பது தான் இப்போதைக்கு எங்கள் கொள்கை என்று முக ஸ்டாலின் தெரிவித்தார்…
இடைத்தேர்தலில் மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்த பாரதீய ஜனதா தலைவர் அண்ணாமலை, இது திமுக அரசின் 22 மாத செயல்பாட்டை பார்த்து மக்கள் வாக்களிக்கவில்லை என்றும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் 10 வருட பாரதீய ஜனதா ஆட்சிக்கான டெஸ்ட் என்றும் தெரிவித்தார்…