பிரித்தானியாவை உலுக்கிய தம்பதி விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம்: சடலமாக மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை


பிரித்தானியாவில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் பச்சிளம் குழந்தையுடன் மாயமான தம்பதி, இறுதியில் பொலிசாரிடம் சிக்கியுள்ள நிலையில், தற்போது அவர்களின் குழந்தையும் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் சடலம்

பிரைட்டன் நகரில் உள்ள வனப்பகுதியில் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு அறிவித்துள்ளது.
இதே பகுதியிலேயே திங்களன்று, Constance Marten அவரது காதலர் Mark Gordon ஆகியோர் கைதானார்கள்.

பிரித்தானியாவை உலுக்கிய தம்பதி விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம்: சடலமாக மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை | Massive Police Search Baby Body Found

@facebook

மிக விரைவில் உடற்கூராய்வுகள் முன்னெடுக்கப்படும் எனவும், குழந்தையின் சடலம் மீட்கப்பட்ட பகுதியில் விரிவான பரிசோதனை முன்னெடுக்கப்படும் எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

கைதான Constance Marten மற்றும் அவரது காதலர் Mark Gordon ஆகியோர் மீது பல பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
குறித்த தம்பதி கைது செய்யப்பட்டதில் இருந்து, காணாமல் போன குழந்தைக்காக கிழக்கு சசெக்ஸின் 91 சதுர மைல்கள் முழுவதும் பொலிசார் தீவிரமாக தேடி வந்தனர்.

சுமார் 200 பொலிசார் களமிறக்கப்பட்டு, தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், அந்த தம்பதி 7 வாரங்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்ததால், காண்டிப்பாக குழந்தைக்கு அபாயம் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக பொலிசார் குறிப்பிட்டிருந்தனர்.

பிரித்தானியாவை உலுக்கிய தம்பதி விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம்: சடலமாக மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை | Massive Police Search Baby Body Found

ஜனவரி 5 ஆம் திகதி கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டன் அருகே கார் பழுதடைந்த நிலையில் Constance Marten மற்றும் Mark Gordon தம்பது காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

மேலும், குறித்த தம்பதி மாயமாவதற்கும் ஒரு நாள் முன்பு, அவர்களில் காரிலேயே நிறைமாத கர்ப்பிணியான Constance Marten பிள்ளை பெற்றெடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தனிமைப்படுத்திக்கொண்டு வாழ்ந்த  தம்பதி

மேலும், Constance Marten சுமார் 15,000 பவுண்டுகள் தொகையை வங்கியில் இருந்து பெற்றுக்கொண்ட பின்னரே, மாயமானதாகவும் பொலிஸ் தரப்பில் கண்டறியப்பட்டுள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த பணக்கார பிரபுத்துவ குடும்பத்து உறுப்பினரான Constance Marten தமது காதலர் Mark Gordon என்பவருடன் மாயமானார். 2016ல் முதல் முறையாக சந்தித்துக்கொண்ட இந்த தம்பதி அதன் பின்னர், தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு வாழ்ந்து வந்தனர்.

பிரித்தானியாவை உலுக்கிய தம்பதி விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம்: சடலமாக மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை | Massive Police Search Baby Body Found

@Brighton Pictures

இந்த நிலையில் Constance Marten கருவுற்ற பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் முதல் இந்த தம்பதி வாடகை குடியிருப்புகளில் சில வாரங்கள் என மாறி மாறி தங்கி வந்துள்ளனர்.

மட்டுமின்றி பிரித்தானியா முழுக்க இந்த தம்பதி வாடகை டாக்சியில் பயணித்து வந்துள்ளது.

ஜனவரி 5ம் திகதி இவர்களின் கார் M61 போல்டன் அருகாமையில் பழுதான நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

அதன் பின்னர் இவர்கள் போல்டனில் இருந்து லிவர்பூல், எசெக்ஸில் ஹார்விச், கிழக்கு லண்டன், பின்னர் சசெக்ஸில் நியூஹவன் ஆகிய பகுதிகளுக்கு வாடகை டாக்சியில் பயணித்துள்ளனர்.

இந்த நிலையில், திங்களன்று போல்டன் பகுதியில் வைத்து கான்ஸ்டன்ஸ் மார்டன் மற்றும் அவரது காதலன் மார்க் கார்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.