பிரான்ஸ் நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ‘Citroen’ என்ற கார் தயாரிப்பு நிறுவனம். ‘eC3’ என்ற மின்சார காரை அறிமுகம் செய்துள்ளது. 11.50 லட்சம் ரூபாய் என்ற விற்பனை விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த கார், நிறங்கள் மற்றும் கூடுதல் அம்சங்களைப் பொறுத்து 12.43 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்ய முடிவுச் செய்யப்பட்டுள்ளது.
இந்த மின்சார கார் 13 நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 57 நிமிடங்களில் 80% வரை சார்ஜ் செய்துக் கொள்ளலாம். ஒரு முறை சார்ஜ் செய்தால் 320 கி.மீ. தூரம் வரைப் பயணிக்கலாம். காரை வாங்குவதற்கான முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், நாடு முழுவதும் 25 நகரங்களில் ‘eC3’ என்ற மின்சார கார் விற்பனை செய்யப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.