வியட்நாம் புதிய அதிபராக வோ வேன் தோங் போட்டியின்றி தேர்வு

வியட்நாமின் புதிய அதிபராக வோ வேன் தோங் (Vo Van Thuong) ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

முன்னாள் அதிபர் நுயென் சுவான் புக் (( Nguyen Xuan Phuc )) தனக்குக் கீழுள்ள அதிகாரிகள் செய்யும் முறைகேடுகளை கண்டுகொள்ளத் தவறிவிட்டார் என்ற புகாரின் பேரில் கடந்த ஜனவரி மாதம் பதவி விலகினார்.

இந்த நிலையில் தான் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வோ வேன் தோங் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 488 உறுப்பினர்களைக் கொண்ட அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் 487 உறுப்பினர்கள் வோ வேன் தோங்-க்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.