ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளரை விட 66,575 வாக்குகள் கூடுதல் பெற்று வெற்றி வாகை சூடியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்.27ம் தேதி நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக […]
