அமெரிக்கா எதிர்கொள்ளாத ஒழுக்கமான எதிரி சீனா தான்! குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்


    அமெரிக்கா குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான நிக்கி ஹேலி வெள்ளிக்கிழமை ஆளும் ஜனநாயகக் கட்சியை ஒரு ‘சோசலிஸ்ட்’ கட்சி என்றும், “கம்யூனிஸ்ட் சீனா” என்பது அமெரிக்கா இதுவரை எதிர்கொள்ளாத வலுவான மற்றும் மிகவும் ஒழுக்கமான எதிரி என்றும் கூறியுள்ளார்.

தேசிய அவமானம்

குடியரசு கட்சியின் அரசியல் நடவடிக்கை மாநாட்டில் நிக்கி ஹேலி பேசியுள்ளார். இந்த நிகழ்வு குடியரசுக் கட்சியின் உயர்மட்ட வருடாந்திர நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்திய அமெரிக்கரான ஹேலி அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அப்போது பேசிய அவர் அமெரிக்கா நாட்டை வெறுக்கும் நாடுகளுக்கு அமெரிக்கா உதவி செய்யக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.சமீபத்திய உளவு பலூன் சம்பவத்தைப் பற்றி குறிப்பிடுகையில், நிக்கி ஹேலி இது ஒரு “தேசிய அவமானம்” என கூறியுள்ளார், “என் வாழ்நாளில் அமெரிக்கர்கள் வானத்தைப் பார்த்து சீன உளவு பலூன் நம்மைத் திரும்பிப் பார்ப்பார்கள் என்று நான் நினைத்ததில்லை. இது ஒரு தேசிய அவமானம்,” என்று அவர் கூறியுள்ளார்.

ஒழுக்கமான எதிரி

“எந்தத் தவறும் செய்யாதீர்கள், கம்யூனிஸ்ட் சீனா தான் நாம் எதிர்கொள்ள வலிமையான மற்றும் ஒழுக்கமான எதிரி. சீனாவை நாம் பொறுப்பேற்க வேண்டும். கோவிட் உடன் தொடங்குவோம். சீனாதான் உளவு பலூனை நமது எல்லைக்கு அப்பால் அனுப்புகிறது என்பதை நாம் எதிர்கொள்ள வேண்டும், ”என்று ஹேலி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதரான ஹேலி, பிப்ரவரி 14 அன்று தனது ஜனாதிபதித் தேர்தலை அறிவித்துள்ளார். அவர் முன்னாள் ஜனாதிபதியுமான டொனால்ட் டிரம்பிற்கு எதிராக வேட்பாளாராக நிற்பார் என தெரியவந்துள்ளது.

அமெரிக்கா எதிர்கொள்ளாத ஒழுக்கமான எதிரி சீனா தான்! குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் | America Displine Enemy Is China Says Niiki Haley@ Getty Images

அமெரிக்காவின் காலம் கடந்துவிட்டதாக சீனா நினைக்கிறது என்றும், அமெரிக்காவின் அனைத்து எதிரிகளும் அப்படித்தான் நினைக்கிறார்கள், ஆனால் அவர்கள் தவறாக நினைக்கிறார்கள் என்றும் ஹேலி கூறியுள்ளார். ஹேலி தனது உரையில் ஆளும் ஜனநாயக கட்சி, ஜனாதிபதி ஜோ பிடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோரை கடுமையாக விமர்சித்துள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.