கடலூர் உட்பட 12 மாவட்டங்களுடன் தேசிய இளைஞர் விழா பஞ்சாப்பில் தொடக்கம்

சண்டிகர்: கடலூர் உட்பட 12 மாவட்டங்களில் இளைஞர் விழாவை ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் தொடங்கி வைத்தார். ஒன்றிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் நேரு யுவ கேந்திரா சங்கதன் சார்பில் நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இளைஞர் விழா கொண்டாடப்பட உள்ளது. முதல் கட்டமாக 150 மாவட்டங்களில் இளைஞர் விழாவின் கீழ் வரும் 31ம் தேதி வரை மாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

இவ்விழாவை ஒன்றிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மற்றும் தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் பஞ்சாப்பில் உள்ள ஐஐடி ரோபரில் நேற்று தொடங்கி வைத்தார். இத்துடன், பிரதாப்கர் (உ.பி.), ஹரித்வார் (உத்தராகண்ட்), தார் மற்றும் ஓசங்காபாத் (ம.பி.), ஹனுமன்கர் (ராஜஸ்தான்), சராய்கேலா (ஜார்கண்ட்), கபுர்தலா (பஞ்சாப்), ஜல்கான் (மஹாராஷ்டிரா), விஜயவாரா (ஆந்திரப் பிரதேசம்), கரீம் நகர் (தெலங்கானா), பாலக்காடு (கேரளா), கடலூர் (தமிழ்நாடு) ஆகிய 12 இடங்களில் இளைஞர் விழா ஒரே நேரத்தில் தொடங்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.