
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு தனது மார்பு பகுதியிலிருந்த புற்றுநோய் தோல் புண் அகற்றப்பட்டுள்ளது. வழக்கமான மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டு வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது. மேலும் எந்த விதமான சிகிச்சையும் தேவையில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ஒன்றரை ஆண்டு ரஷ்ய உக்ரைன் போருக்குப் பிறகு, உக்ரைனின் பஹ்க்மூத் பகுதியை ரஷ்யா ஆக்கிரமித்துள்ளது.

இந்தோனேசியாவில் எண்ணெய் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 50 பேர் படுகாயமடைந்தனர்.

கொலம்பியாவில் மோசமான சாலைகளை எதிர்த்து போராட்டம் நடத்திய மக்கள், 80 காவல்துறை அதிகாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன ஊழியர்களைப் பிணைக் கைதிகளாகப் பிடித்துவைத்தனர். இதில் ஒரு காவல்துறை அதிகாரி, உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர்.

இங்கிலாந்து அரசர் சார்லஸ், அரசரான பிறகு முதல் முறையாக பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்கிறார். ஐந்து நாள்கள் இருக்கும் இந்தப் பயணத்தில் இரு ஐரோப்பிய அண்டை நாடுகளின் பாராளுமன்றங்களில் உரையாற்றுகிறார்.

2023 ஆம் ஆண்டின் உலக வனவிலங்கு பாதுகாப்பு தினத்தின் கருப்பொருளாக, “வனவிலங்கு பாதுகாப்புக்கான கூட்டு — உலகின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைப் பாதுகாப்பதில் மாற்றத்தை ஏற்படுத்துபவர்களைக் கௌரவிக்கும் குறிக்கோள்” என்பது ஐநாவால் தேர்வு செய்யப்பட்டுள்ளது

துருக்கி-சிரியா நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் நோக்கில் இந்திய-அமெரிக்கர்கள் 300,000 அமெரிக்க டாலர்கள் நிதி திரட்டியுள்ளனர்.

ஈராக்கில் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது. 2.5 பில்லியின் டாலர் பொது மக்களின் பணம் முன்னாள் ஈராக்கிய அதிகாரிகளால் களவாடப்பட்டது தெரியவந்துள்ளது.

கிரீஸ் நாட்டில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நியாயம் வேண்டி நாடு முழுவதும் மக்கள் போராடி வருகின்றனர்.

ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் மீது பயங்கர தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.