நான் எப்போதும் வித்தியாசமாக உணர்ந்தேன்…அரண்மனையில் இருந்து வெளியேற்றப்பட்ட இளவரசர் ஹரி பேட்டி


எனது குடும்பத்தில் உள்ள மற்றவர்களை விட நான் எப்போதும் வித்தியாசமாக உணர்ந்தேன் என பிரித்தானிய இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார்.

அரண்மனையில் இருந்து வெளியேற்றம்

ராஜ குடும்பம் தொடர்பான அடுத்தடுத்த கருத்துகளை இளவரசர் ஹரி வெளிப்படுத்தி வரும் நிலையில், எலிசபெத் மகாராணியார் இளவரசர் ஹரி மேகன் தம்பதியருக்கு வழங்கிய வீட்டிலிருந்து வெளியேற மன்னர் சார்லஸ் உத்தரவிட்டுள்ளார்.

 

ஓபரா பேட்டி முதல் நெட்ப்ளிக்ஸ் தொடர் வரை இளவரசர் ஹரியும் மேகனும் பல்வேறு வகையான அவமானங்களை பிரித்தானிய ராஜ குடும்பத்துக்கு ஏற்படுத்திய போது கூட பொறுமையாக இருந்த மன்னர் மூன்றாம் சார்லஸ், தற்போது இப்படி ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

நான் எப்போதும் வித்தியாசமாக உணர்ந்தேன்…அரண்மனையில் இருந்து வெளியேற்றப்பட்ட இளவரசர் ஹரி பேட்டி | Uk Prince Harry I Always Felt Different To RestSky News

மேலும்  இளவரசர் ஹரியும் மேகனும் Frogmore மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டதை அடுத்து, அவற்றை  தனது சகோதரர் இளவரசர் ஆண்ட்ரூவுக்கு ஒதுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 


நான் எப்போதும் வித்தியாசமாக உணர்ந்தேன்

.
இந்நிலையில், எழுத்தாளர் டாக்டர் கபோர் மேட் உடனான நேரடி ஒளிபரப்பு உரையாடலின் போது, இளவரசர் ஹரி தான் எப்போதும் தனது குடும்பத்தில் உள்ள மற்றவர்களை விட வித்தியாசமாக இருப்பதாகவும், அவருடைய அம்மாவும் அப்படித்தான் உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

நான் எப்போதும் வித்தியாசமாக உணர்ந்தேன்…அரண்மனையில் இருந்து வெளியேற்றப்பட்ட இளவரசர் ஹரி பேட்டி | Uk Prince Harry I Always Felt Different To RestSky News

அத்துடன் “நான் நிச்சயமாக என் வாழ்நாள் முழுவதும் உணர்ந்திருக்கிறேன், என் இளமைப் பருவத்தில், என் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு இடையே நான் சற்று வித்தியாசமாக உணர்ந்தேன்.”

“என் அம்மாவும் அதையே உணர்ந்தார் என்று எனக்குத் தெரியும், அதனால் அது எனக்குப் புரியும்.” என்றும் இளவரசர் ஹரி வெளிப்படுத்தியுள்ளார்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.