பரிதாபங்கள் சேனலுக்கு ஆபத்து..? ரூட்டு மாறுது… எல்லா பிரச்சினைக்கும் இதுவா காரணம்?

வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து இந்திய நாடே பேசி வருகிறது… பாதுகாப்பற்ற நிலையில் இருப்பது போல் உணரும் வெளிமாநிலத்தவர்கள் காவல்துறை உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு தனி புகார் பிரிவை உருவாகியுள்ளது… தேவையில்லாமல் வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பினால் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என்று டிஜிபி சைலேந்திர பாபு உறுதியளித்துள்ளார்…

ஊடகங்கங்கள் வடமாநில தொழிலாளர்களை தேடி சென்று பேட்டி அளித்து ஒளிபரப்பி வருகின்றனர்… இதற்கெல்லாம் காரணம் ஒரே ஒரு போலி ட்வீட் தான் என்றால் நினைக்கும்போதே வியப்பாக உள்ளது… தமிழ்நாட்டிற்குள் நடந்த இரு குற்ற சம்பவங்களின் வீடியோவை வட மாநிலத்தில் இருந்து ஒருவர் பகிர்ந்து ” பிகார் தொழிலாளர்கள் இந்தி பேசியதால் கொலை செய்யப்பட்டனர்” என்று பரப்பி இந்த பரபரப்புக்கு பிள்ளையார் சுழியை போட்டார்.

அதன் உண்மை தன்மையை ஆராயாமலேயே செய்தி வெளியிட்ட இந்தி செய்தி நிறுவனத்தின் ஆசிரியரும், பாஜக செய்தித் தொடர்பாளருமான பிரசாந்த் படேல் உம்ராவ் மீது தமிழ்நாடு காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. அவரை கைது செய்ய தமிழக தனிப்படை டெல்லிக்கு விரைந்துள்ளது.

இந்த நிலையில், வட மாநில தொழிலாளர்களை மையப்படுத்தி எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு பிரபல யூ டியூபர்களான பரிதாபங்கள் கோபி & சுதாகர் தான் என்றும் அவர்களது சேனலை தடை செய்ய வேண்டும் என்று பாஜகவினர் திடீரென பரபரப்பை கிளப்பியுள்ளனர். வட மாநிலத்தவர்கள் ரயிலில் அத்துமீறிய சம்பவங்கள் அனைவரும் அறிந்ததே. அந்த சம்பவத்தை மையப்படுத்திதான் பரிதாபங்கள் குழு வீடியோ வெளியிட்டது. அதிலும், வட மாநில தொழிலாளர்கள் மீது வன்மத்தை வெளிப்படுத்தியதான காட்சிகள் அதில் இல்லை. அவ்வாறு இருந்திருந்தால் அந்த வீடியோ வந்தபோதே எதிர்ப்புகள் கிளம்பியிருக்கும்.

மாறாக, தமிழர்கள் புறக்கணிக்கும் வேலைகளை குறைவான காசுக்கு வட மாநிலத்தவர்கள் செய்வதையும், முன்பதிவு செய்யப்பட்டுள்ள ரயில் இருக்கைகளை ஆக்கிரமிக்கும் நிகழ்வினையும் அதில் வெளிப்படுத்தி இருப்பார்கள். மேலும், நாம் தமிழர் சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அந்த வீடியோவை மேற்கோள்காட்டி ஈரோடு கிழக்கு இடைத்தர்தலிலும் பிரச்சாரம் மேற்கொண்டனர். பலரும், அந்த வீடியோவை பல இடங்களில் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது யாரோ பரப்பிய போலி வீடியோவால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு ஒரு ட்ரோல் சேனலை டார்கெட் செய்வது தேவையற்றது என்று நெட்டிசன்கள் கெமெண்டிட்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.