புதுச்சேரி: புதுச்சேரி அரசின் முழுமையான பட்ஜெட் 12 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 13ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. புதுச்சேரி வரலாற்றில் 12 ஆண்டுகளுக்கு பிறகு மார்ச் மாதத்தில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. கடந்த மாதம் மாநில திட்டக்குழு கூடி புதுச்சேரி மாநிலத்தின் பட்ஜெட் ரூ.11,600 கோடிக்கு தயார் செய்தது. இதற்கு ஒன்றிய அரசின் நிதித்துறை, உள்துறை தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதையடுத்து திட்டமிட்டபடி வருகிற 9ம் தேதி புதுச்சேரி சட்டசபையில் ஆளுநர் தமிழிசை உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்குகிறது.
வரும் 13ம் தேதி நிதித்துறை பொறுப்பை வகிக்கும் முதல்வர் ரங்கசாமி முழு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். மாநில அரசு கோரிய நிதிக்கு முழுமையான ஒப்புதலை ஒன்றிய அரசு வழங்கியுள்ளதால் இந்த பட்ஜெட்டில் வரிச்சலுகை மட்டுமின்றி புதிய நலத்திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.