 
                                  
பெரம்பலூர் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 49 வயதுடைய நபரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் பரவாய் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (49). இவர் நேற்று முன்தினம் ஒரு வீட்டில் தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட 26 வயதுடைய இளம்பெண்ணுக்கு தின்பண்டங்கள் வாங்கி கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்பொழுது இவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த இளம்பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால், அந்தப் பெண்ணின் தாய் இது குறித்து அவரிடம் விசாரித்துள்ளார்.
அப்பொழுது பால்ராஜ் வீட்டிற்கு வந்து சென்றதும், இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, இளம்பெண்ணின் தாய் இது குறித்து குன்னம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு, பால்ராஜை கைது செய்தனர். பின்பு போலீசார் பெரம்பலூர் நீதிமன்றத்தில் பால்ராஜை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
