முன்னேறும் ரஷ்ய படைகள்…கடுமையான அழுத்தத்தில் உக்ரைன்: பிரித்தானிய உளவுத்துறை எச்சரிக்கை


ரஷ்ய படைகள் தொடர்ந்து முன்னேற்றங்களை மேற்கொண்டு வருவதால் கடுமையான அழுத்தத்தின் கீழ் உக்ரைனிய பாதுகாப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


நெருக்கும் ரஷ்ய படைகள்

உக்ரைன் மீதான போர் ஓராண்டை நிறைவு செய்து இருக்கும் நிலையில், ரஷ்ய படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும் உக்ரைனியர்களுக்கு எதிராக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல்களும் வெளியாகியுள்ளது.

முன்னேறும் ரஷ்ய படைகள்...கடுமையான அழுத்தத்தில் உக்ரைன்: பிரித்தானிய உளவுத்துறை எச்சரிக்கை | Ukraine Severe Pressure As Russia Makes AdvancesSkyNews

இந்நிலையில் உக்ரைனின் கிழக்கு நகரமான பாக்முட்டில் தீவிரமான சண்டைகள் தொடர்வதால் கடுமையான அழுத்தத்தில் உக்ரைனிய பாதுகாப்பு படைகள் இருப்பதாக பிரித்தானிய உளவுத் துறை அறிக்கை தெரிவித்துள்ளது.

உளவுத் துறை அறிக்கை

பிரித்தானியாவின் சமீபத்திய புதுப்பிப்பில், ரஷ்ய ராணுவம் மற்றும் வாக்னர் குழுவின் கூலிப்படை போராளிகள் நகரின் வடக்கு புறநகர்ப் பகுதிகளில்  முன்னேற்றங்களை மேற்கொண்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் விளக்கியுள்ளது.

பாக்முட் இப்போது உக்ரைனிய கட்டுப்பாட்டில் உள்ளது, இப்பகுதி மூன்று பக்கங்களிலும் தாக்குதல்களுக்கு பாதிக்கப்படக்கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்பகுதி உக்ரைன் எலைட் யூனிட் மூலம் வலுவாக இருக்கும் அதே வேளையில், பாக்முட்டிலிருந்து Kyiv-க்கு இருக்கும் மறு விநியோக வழிகள் “பெருகிய முறையில் குறைவாகவே உள்ளன” என்றும் உளவு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.