டெல்லி: வதந்தி பரப்பியது தொடர்பாக போலீஸ் வழக்கு பதிந்ததால் புலம்பெயர் தொழிலாளர் பற்றிய பதிவை பாஜக நிர்வாகி நீக்கினார். தமிழ்நாட்டில் இந்தி பேசிய 12 புலம்பெயர் தொழிலாளர்கள் கொலை என உ.பி. பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் வதந்தி பரப்பியிருந்தார். உமாராவ் பதிவிட்ட வதந்தி டிவீட்டை பாஜகவை சேர்ந்தவர்கள், அவர்களது ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பியதால் பீதி ஏற்பட்டது.
