வதந்தி பரப்புவோர் இந்திய நாட்டுக்கே எதிரானவர்கள்.. வடமாநில தொழிலாளர்கள் அச்சம் கொள்ள வேண்டாம் – முதலமைச்சர் கண்டனம்

வெளிமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புபவர்கள், இந்திய நாட்டிற்கே எதிரானவர்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள முதலமைச்சர், வர்த்தகத்திற்காக, மருத்துவத்திற்காக, கல்விக்காக, வேலைக்காக தமிழ்நாட்டிற்கு வரும் வெளிமாநில தொழிலாளர்கள் தாங்களும் உயர்ந்து தமிழ்நாட்டையும் உயர்த்தியிருப்பதாகவும், கொரோனா இரண்டாம் அலையின் போது மாவட்டந்தோறும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டு, குடும்ப அட்டை இல்லாத, வேலையிழந்த வடமாநில தொழிலாளர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பீகாரைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர், வேறு ஒரு மாநிலத்தில் நடந்த இரு தனிப்பட்ட நபர்களுக்கு இடையிலான மோதலை தமிழ்நாட்டில் நடந்ததை போல வதந்தி பரப்பியதே இந்த சர்ச்சைக்கு காரணம் என தெரிவித்துள்ள முதலமைச்சர், வதந்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.