ஸ்டாலின் ஜேக்கப் மரணம்… முதலமைச்சர் இரங்கல்… இணையம் முழுவதும் கண்ணீர் அஞ்சலி

Photographer Stalin Jacob Death: கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டாலின் ஜேக்கப் ( 37 ) . இவர் பிரபல புகைப்படக் கலைஞர் ஆவார். சென்னையில் வசித்த இவர், க்ளவுட் கிட்சன் நடத்தி வருகிறார். What a varuvadu என்ற ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். 

சமூக வலைதளத்தில் மிகப் பிரபலமான ஸ்டாலின் ஜேக்கபின் பல்வேறு புகைப்படங்கள் வைரலாகி உள்ளன. அதுமட்டுமின்றி தனது கிளவுட் கிட்சன் தொழிலையும் செய்து வந்தார். அவ்வப்பொழுது ஒளிப்பதிவு மற்றும் புகைப்படங்கள் எடுப்பதற்காக சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் பயணிப்பது வழக்கமாகக் கொண்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் தனது நண்பரான சென்னை அம்பத்தூர் பகுதி சேர்ந்த விஷ்ணு, என்பருடன் அரசு நிகழ்ச்சி ஒன்றை நேற்று (மார்ச் 3) ஒளிப்பதிவு செய்துவிட்டு,  திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, சாலையை கடக்க முயன்றபோது  கனரக வாகன மோதி சம்பவ இடத்திலேயே இருவரும் தூக்கி வீசப்பட்டு உயிருக்கு போராடினர். 

அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் 108 ஆம்புலன்ஸ் விரைந்து வந்து இருவரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.

முன்னதாக உயிரிழந்த ஸ்டாலின் ஜேக்கப் நேற்று முன்தினம் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். மேலும் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள கனிமொழிக்கு நெருக்கமான ஸ்டாலின் ஜேக்கப், அவரை நேற்று நேரடியாக சென்று அவருடன் புகைப்படமும் எடுத்துள்ளார். பிரபல புகைப்பட கலைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்,”நேற்றுதான் பிறந்தநாள் கொண்டாடிய நிலையில், திமுகவின் துடிப்பான சமூக வலைத்தளச் செயல்வீரர் ஸ்டாலின் ஜேக்கப் இத்தனை இளம் வயதில் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்ற செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் & உடன்பிறப்புகளுக்கு எனது ஆறுதலும் ஆழ்ந்த இரங்கல்” என குறிப்பிட்டுள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.