அமெரிக்கா: 13 வயது சிறுவனுடன் கட்டாய பாலியல் உறவு; 31 வயது பெண் கர்ப்பம்

வாஷிங்டன்,

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் வசித்து வரும் பெண் ஆண்ட்ரியா செர்ரானோ (வயது 31). கடந்த 2022-ம் ஆண்டு 13 வயது சிறுவன் ஒருவனுடன் நட்பாக பழகியுள்ளார்.

இந்த நட்பு நாளடைவில் தகாத உறவில் சென்று முடிவடைந்தது. அந்த சிறுவனை கட்டாயப்படுத்தி அவர் பாலியல் உறவு கொண்டுள்ளார். இதனால், குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டுக்கு ஆண்ட்ரியா ஆளானார்.

இதனை தொடர்ந்து, பவுண்டைன் நகர போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கடந்த ஆண்டு ஆண்ட்ரியாவை கைது செய்தனர். அவர், பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டை எதிர்கொண்டு உள்ளார்.

எனினும், கர்ப்பிணியாக இருந்த ஆண்ட்ரியா தனது வழக்கறிஞர்களை கொண்டு, அரசு வழக்கறிஞர்களிடம் பேசி தண்டனையை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.

இந்த வழக்கில் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், சிறுவனை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தவர் என்ற அளவில் குற்றச்சாட்டு பதிவாகவும், சிறை தண்டனையில் இருந்து தப்பிப்பதற்கான அளவிலான ஒப்பந்தத்திற்கும் ஆண்ட்ரியா சம்மதம் தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், கர்ப்பிணியாக இருந்த ஆண்ட்ரியா கடந்த ஆண்டு ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்து உள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார், ஒரு குழந்தைக்கு 13 வயது குழந்தையாக உள்ள சிறுவன் தந்தையாகி விட்டான்.

அவனது மீதமுள்ள குழந்தை கால பருவம் வீணாகி விட்டது என வேதனை தெரிவித்து உள்ளார். தற்போது சிறுவனுக்கு 14 வயது ஆன நிலையில் அவனது தாயார், எனது மகனின் குழந்தை பருவம் திருடப்பட்டு விட்டது என்றே உணர்கிறேன். தற்போது, அவன் தந்தையாகி விட்டான். அந்த நிலையுடனேயே அவனது மீதமுள்ள வாழ்க்கையும் கழியும்.

ஒருவேளை ஆண்ட்ரியா ஆணாக இருந்து, என் மகன் சிறுமியாக இருந்திருந்தால், இந்த வழக்கு நிச்சயம் வேறுபட்டு இருக்கும். பெண் என்பதற்காக அவர் மீது இரக்கம் காட்டுகிறார்கள் என கூறியுள்ளார். இந்த வழக்கில் வருகிற மே மாதம் விசாரணை நடந்து தீர்ப்பு அளிக்கப்படும் என தகவல் தெரிவிக்கின்றது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.