கடலூர் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில், கட்டடங்கள் இடிந்து தரைமட்டமானதில் ஐந்து தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம், சிவனார்புரத்தில் தனியார் பட்டாசு குடோன் ஒன்று இயங்கிவந்துள்ளது. இன்று மாலை சுமார் ஐந்து முப்பது மணி அளவில் இந்த பட்டாசு குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு, மொத்த கட்டிடமும் சுக்குநூறாக தரைமட்டமானது.
மேலும் இந்த பட்டாசு குடோனில் பணிபுரிந்து வந்த 9 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. பெண் தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
மேலும், படுகாயம் அடைந்தவர்களை உடனடியாக பொதுமக்கள் மருத்துவமனைக்கு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விபத்து குறித்து தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் தற்போது கோடை காலத்தை மிஞ்சும் அளவிற்கு வெப்பம் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், பட்டாசு ஆலைகள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை உடன் செயல்பட அரசு அறிவுறுத்த வேண்டும் என்று, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்,