கடலூர்: கடலூர் மாவட்டம் பெரியாகட்டுப்பாளையம் அருகே சிவனார்புரம் பகுதியிலுள்ள பட்டாசு கிடங்கில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 தொழிலாளர்கள் தீக்காயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.பட்டாசு கிடங்கில் இருந்த பட்டாசுகள் தொடர்ந்து வெடித்து வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
